“சூர்யாவை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும்” - இயக்குநர் மிஷ்கின் பேச்சு
நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள்.
சென்னை: “நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை’’ என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கோபமடைகிறார்கள். அது அவர்களின் உரிமைதான். ஆனால் படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும். சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தைப் பற்றி விமர்சனங்கள் வந்தது.