புஷ்பா 2 - திரை விமர்சனம்
கதையில் ‘புஷ்பா ’னா ‘ஃபிளவர்’னு நினைச்சியா?, ‘ஃபயர்’, ‘வைல்ட் ஃபயர்’ என்று மாஸ் வசனம் வரும். ஆனால் அந்த இரண்டுமே படத்தில் இல்லை!
செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் புஷ்பராஜுடன் (அல்லு அர்ஜுன்). ஈகோ மோதலில் ஈடுபடுகிறார். ஐபிஎஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்), அவருடைய ராஜ்ஜியத்தை அழிக்கவும் முயல்கிறார். இன்னொருபுறம் தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுக்கும் முதல்வர் நரசிம்ம ரெட்டியை (ஆடுகளம் நரேன்) தூக்கி விட்டு, தனக்கு வேண்டிய பூமிரெட்டி சித்தப்பாவை (ராவ் ரமேஷ்) முதல்வராக்குகிறார் புஷ்பராஜ்.
இடையில் தன்னை ஒதுக்கி வைக்கும் தன் தந்தையின் மூத்த தாரத்து குடும்பத்துக்கு ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்கிறார். இறுதியில் புஷ்பராஜ் - ஃபஹத் ஃபாசில் மோதல் என்ன ஆனது? பகையான குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா? என்பது கதை.