ராகவா லாரன்ஸுக்கு வில்லனாகிறார் மாதவன்!
லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம், ‘பென்ஸ்’.
லோகேஷ் கனகராஜ் ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம், ‘பென்ஸ்’. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸி’ன் ஒரு பகுதியாக இந்தப் படம் உருவாகிறது.
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜும் இதைத் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் திரைப் படமாக உருவாகும் இதில் வில்லனாக நடிக்க சில ஹீரோக்களிடம் பேசி வந்தனர். இப்போது நடிகர் மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. படக்குழு இதை உறுதிப்படுத்த வில்லை.