‘எல்ஐசி தலைப்புக்கு உங்கள் கணவர் செய்தது நியாயமா?’ - நயன்தாராவுக்கு இயக்குநர் குமரன் கேள்வி

“என்‌ கதைக்கும்‌ அந்தத்‌ தலைப்புக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால்‌ LIC என்ற தலைப்பை வழங்க முடியாது என நேர்மையான முறையில்‌ பதில்‌ அளித்தும்‌ அதிகாரத்‌ தன்மையுடன்‌ அதே தலைப்பைத்‌ தன்‌ படத்துக்கு விக்னேஷ்‌ சிவன்‌ வைக்கிறார்‌ என்றால்‌, ‘உன்னால்‌ என்ன பண்ண முடியும்‌’ என்ற அதிகார நிலை தானே காரணமாய்‌ இருக்க முடியும்‌. அதற்கு எந்தக்‌ கடவுள்‌ மன்றத்தில்‌ விக்னேஷ்‌ சிவனைப்‌ பதில்‌ சொல்ல சொல்வீர்கள்‌” என இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

‘எல்ஐசி தலைப்புக்கு உங்கள் கணவர் செய்தது நியாயமா?’ - நயன்தாராவுக்கு இயக்குநர் குமரன் கேள்வி

சென்னை: “என்‌ கதைக்கும்‌ அந்தத்‌ தலைப்புக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால்‌ LIC என்ற தலைப்பை வழங்க முடியாது என நேர்மையான முறையில்‌ பதில்‌ அளித்தும்‌ அதிகாரத்‌ தன்மையுடன்‌ அதே தலைப்பைத்‌ தன்‌ படத்துக்கு விக்னேஷ்‌ சிவன்‌ வைக்கிறார்‌ என்றால்‌, ‘உன்னால்‌ என்ன பண்ண முடியும்‌’ என்ற அதிகார நிலை தானே காரணமாய்‌ இருக்க முடியும்‌. அதற்கு எந்தக்‌ கடவுள்‌ மன்றத்தில்‌ விக்னேஷ்‌ சிவனைப்‌ பதில்‌ சொல்ல சொல்வீர்கள்‌” என இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வினாடிக்‌ காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத்‌ தனுஷ்‌ உங்கள்‌ மீது வழக்கு தொடர்ந்ததால் வெகுண்டு எழுந்த நீங்கள்‌, கடந்த ஆண்டு ‘LIC’ என்ற என்‌ தலைப்பை உங்கள்‌ கணவர்‌ விக்னேஷ்‌ சிவன்‌ என்‌ அனுமதி இல்லாமல்‌ பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்‌. ‘LIC’ என்ற தலைப்பு என்‌ நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருப்பதை அறிந்த விக்னேஷ்‌ சிவன்‌ தன்‌ மேலாளர்‌ மூலம்‌ என்னிடம்‌ கேட்டு, நான்‌ வழங்காத நிலையிலும்‌ அதே தலைப்பை அவர்‌ படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில்‌ நியாயம்‌.