சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார் 

சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார் 

சென்னை: சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டான்சர், நடிகர் என பன்முகம் கொண்ட நேத்ரன், ‘ஜோடி நம்பர் 1’ 3வது சீசன் மற்றும் 5வது சீசன், ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’, ‘சூப்பர் குடும்பம்’ உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றவர். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’, ‘ரஞ்சிதமே’ தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தடம் பதித்துள்ளார்.