மாற்று சினிமா இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜெயபாரதி காலமானார். அவருக்கு வயது 77.

மாற்று சினிமா இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்

சென்னை: நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜெயபாரதி காலமானார். அவருக்கு வயது 77.

தமிழில் முதல்முறையாக 1979ஆம் ஆண்டு கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரித்து இவர் இயக்கிய படம் ‘குடிசை’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. இதனையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.