‘இந்தியன் 2’ படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டது - சித்தார்த் பெருமிதம்
‘இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் என்னோடு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு காதல், நட்பு, குடும்பம் என ஒரு படம் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல படத்துக்கு நல்ல படம் என்கிற அடையாளத்தை ஆடியன்ஸ் தான் கொடுக்க வேண்டும்.