புஷ்பா 2 - கொண்டாட்டமா... திண்டாட்டமா?
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘புஷ்பா - 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் பிஹார் தலைநகர் பாட்னாவில் பிரம்மாண்டமாக நடந்தது.
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘புஷ்பா - 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் பிஹார் தலைநகர் பாட்னாவில் பிரம்மாண்டமாக நடந்தது. பெரும் பொருட்செலவில் (ரூ.500 கோடி என்கிறார்கள்?!) இப்படம் உருவாகி இருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த ரசிகர்கள் டிக்கெட்டின் விலையைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள்.
350 ரூபாய் தொடங்கி 3 ஆயிரம் வரை நேற்றைய முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குமுறுகிறார்கள். இது தெரியாமல், டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கிய ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு ‘நன்றி’ தெரிவித்து அல்லு அர்ஜுன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட, ஏற்கெனவே கொதிப்பில் இருந்த ரசிகர்கள் இப்பதிவைப் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.