‘காலா’ படத்தில் பா.ரஞ்சித் மீட்டிய காதல் வீணை... - பிறந்த நாள் சிறப்பு பகிர்வு
தமிழ் சினிமாவின் கதைக்களங்களில் புதுமைமிகு மாற்றங்களை விதைத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்த நாளையொட்டி அவரது இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் காதல் காட்சிகள் குறித்து விரிவாக பார்ப்போம். d
தமிழ் சினிமாவின் கதைக்களங்களில் புதுமைமிகு மாற்றங்களை விதைத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்த நாளையொட்டி அவரது இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் காதல் காட்சிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சூழ்ந்திருக்கும் கும்மிருட்டில் மெழுகுவர்த்திக்கு அப்படியே நேர்கோட்டில் அமர்ந்திருப்பார் ஜரீனா (ஹீமா குரேஷி). இருளைக் கவ்வியிருக்கும் வெற்றிடத்தில் நேர்கோட்டில் பரவும் அந்த மஞ்சள் ஒளி ஜரீனாவின் மஞ்சள் நிற சுடிதாரில் பட்டு எதிரொலிக்கும் கணத்தில், குடும்பத்திலிருப்பவர்களை பயமுறுத்தும் பொருட்டு உள்ளே நுழையும் கரிகாலன் (ரஜினி) பயந்து நிற்பார். உண்மையில் பழைய காதலின் மீட்டல் என்பது நம்மை பயமுறுத்தக்கூடியது தானே!