1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி: புகைப்பிடித்ததால் நடிகரை மாற்றிய தயாரிப்பாளர்
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் ஒன்று ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் ஒன்று ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். நாட்டுப்புறக் கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தைப் பாரதிதாசன் எழுதினார். ஆனால், டைட்டிலில் தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகச் சொல்வார்கள்.
அபூர்வ சிந்தாமணியாக, எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்திருந்தார். அவரின் தந்தையாக எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி நடித்தார். பி.எஸ்.கோவிந்தன், மாதுரி தேவி, காளி.என். ரத்தினம், எஸ்.வரலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், எம்.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பாலசுப்பிர மணியம், டி.எஸ்.துரைராஜ், கே.கே.பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.