நடிகர் பிரபாஸ் காயம்
நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்துள்ளார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அவருடைய கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ ஜப்பானில் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகிறது. அங்கு இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருந்தார். இந்த காயம் காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை. இதற்காக அந்நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.