நடிகர், நடிகைகள் சம்பளம்: ஷர்மிளா தாகூர் கவலை

பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், நீண்ட இடைவெளிக்​குப் பிறகு ‘குல்​மொஹர்’ என்ற இந்திப் படத்​தில் நடித்​திருந்​தார்.

நடிகர், நடிகைகள் சம்பளம்: ஷர்மிளா தாகூர் கவலை

பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், நீண்ட இடைவெளிக்​குப் பிறகு ‘குல்​மொஹர்’ என்ற இந்திப் படத்​தில் நடித்​திருந்​தார். அடுத்து பெங்​காலி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்றைய காலகட்​டத்​தில் நடிகர், நடிகைகள் அதிக​மாகச் சம்பளம் வாங்​கு​கிறார்கள் என்றும் படப்​பிடிப்​பில் அவர்​களுக்கான பிற செலவுகள் குறித்​தும் கவலை தெரி​வித்​துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “அதிக சம்பளம் வாங்​கும் நடிகர், நடிகைகள் தங்களுடன் சமையல்​காரர்​கள், மசாஜ் செய்​பவர்கள் என முழு பரிவாரங்​களுடன் படப்​பிடிப்பு​களுக்கு வருவது கவலை​யளிக்​கிறது. சமீபத்​தில் விளம்பர படம் ஒன்றுக்காக எனக்கு ஒப்பனை செய்​தவர், ‘நடிகர், நடிகைகள், தங்களுக்கான ‘வேனிட்டி வேனி’ன் அளவுக்காக சண்டை​யிடு​கிறார்​கள்’ என்று சொன்ன தகவல் ஆச்சரியப்​படுத்​தி​யது.