மினி பேருந்துகளில் ‘தேனிசைத் தென்றல்’ வீசும் 10 பாடல்கள் | தேவா பிறந்தநாள் சிறப்பு

தமிழ்த் திரையுலகம் அதிகம் கொண்டாட மறந்த மகத்தான இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. இந்த ஆதங்கத்தை அண்மையில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் வரும் ஒற்றைக் காட்சி மிகச் சுலபமாக விளக்கியிருக்கும்.

மினி பேருந்துகளில் ‘தேனிசைத் தென்றல்’ வீசும் 10 பாடல்கள் | தேவா பிறந்தநாள் சிறப்பு

தமிழ்த் திரையுலகம் அதிகம் கொண்டாட மறந்த மகத்தான இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. இந்த ஆதங்கத்தை அண்மையில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் வரும் ஒற்றைக் காட்சி மிகச் சுலபமாக விளக்கியிருக்கும். அந்தக் காட்சியில் ‘ராசிதான் கைராசிதான்’ பாடல் வரும். அதைக் கேட்ட ஒருவர் அந்தப் பாடலை வேறொரு இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி ரசிக்க, இன்னொருவர் “அது அவர் அல்ல, தேவா” என்பார்.

இப்படித்தான் தேவாவின் பல பாடல்களை வேறு யாருடையதாகவோ நினைத்துக் கொள்ளும் மனநிலை பலரிடம் வியாபித்திருக்கிறது. அதேபோல் இணையத்தில் தவறுதலாக தேவா இசையமைத்த பாடல்கள் வேறு இசையமைப்பாளர்களின் பாடல் தொகுப்புகளில் சேர்ந்திருக்கிறது.