“இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்...” - மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “மிகப்பெரிய 30-ம் ஆண்டுக்குள் நுழைவதை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எல்லா விஷயங்களும் ஒரு எதிர்பாராத முடிவை சுமந்திருக்கின்றன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்க அர்த்தத்தை தேடுகிறோம். எங்களுடைய நண்பர்களே நாங்கள் இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.