அனுஷ்காவின் ‘Ghaati’ திரைப்படம் ஏப்ரல் 18-ல் ரிலீஸ்! 

அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. 

அனுஷ்காவின் ‘Ghaati’ திரைப்படம் ஏப்ரல் 18-ல் ரிலீஸ்! 

ஹைதராபாத்: அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான ‘வானம்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான ‘வேதம்’ படத்தை இயக்கியவர்.