“ஜேசிபி நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும்...” - ‘புஷ்பா 2’  குறித்து சித்தார்த் கருத்து

 “நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக ஜேசிபியை நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். எனவே பிஹாரில் கூட்டம் கூடுவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. பெரிய மைதானம் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கூட்டம் கூடும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

“ஜேசிபி நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும்...” - ‘புஷ்பா 2’  குறித்து சித்தார்த் கருத்து

சென்னை: “நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக ஜேசிபியை நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும். எனவே பிஹாரில் கூட்டம் கூடியது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. பெரிய மைதானம் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாகி உலக அளவில் ரூ.900 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து நடிகர் சித்தார்த் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அது ஒரு மார்க்கெட்டிங். கூட்டம் கூடுவது இந்தியாவில் பெரிய விஷயமில்லை.