“என்னையும் மக்கள் கிண்டல் செய்தனர்” - ‘கங்குவா’ குறித்து விஜய் சேதுபதி
விஜய்யின் ‘தி கோட்’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி கோபமடைந்து பதிலளித்துள்ளார். “என்னையும் மக்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி கோபமடைந்து பதிலளித்துள்ளார். “என்னையும் மக்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடுதலை 2’ வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இப்படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்க முடிவு செய்தார். விஜய் சேதுபதி அளித்த முதல் பேட்டியில், ‘கங்குவா’ மற்றும் ‘தி கோட்’ தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இங்கு எனது படத்தை விளம்பரப்படுத்த வந்திருக்கிறேன். நான் அதற்கு அதைப் பற்றி பேச வேண்டும். அது எனக்குமே நடந்திருக்கிறது. மக்கள் என்னையும் கிண்டல் செய்திருக்கிறார்கள்.