தி கோட், அமரன், மகாராஜா... - வசூல் குவித்த டாப் 10 தமிழ்ப் படங்கள் | Year Ender 2024
நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்கள் குறித்த விரைவுப் பார்வை இது. இந்தப் பட்டியலில் ரூ.455 கோடி வசூலுடன் விஜய்யின் ‘தி கோட்’ படம் முதலிடத்திலும், ரூ.330 கோடிக்கும் அதிகமான வசூலுடன் சிவகாரத்திகேயனின் ‘அமரன்’ இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் சில பல சர்ப்ரைஸ்களும் உள்ளன.
தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.455 கோடியை வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. டி-ஏஜிங் தொழில்நுட்பம், சிவகார்த்திகேயனின் கேமியோ, த்ரிஷாவின் நடனம், நடிகர்கள் பட்டாளம், இரட்டை வேடத்தில் விஜய் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியான படம் அயற்சியில்லாத திரைக்கதையால் ஸ்கோர் செய்தது.