‘எல்சியு’வில் நானா? - நடிகர் மாதவன் பதில்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம் எல்சியுவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் மாதவன் நடிக்கிறார் என செய்திகள் பரவியதற்கு அவரே பதிலளித்துள்ளார்.
சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம் எல்சியு-வில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் மாதவன் நடிக்கிறார் என செய்திகள் பரவியதற்கு அவரே பதிலளித்துள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ள படம் ‘பென்ஸ்’. இப்படம் எல்.சி.யு-வில் இணையவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை பலரும் பகிர்ந்து மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் தற்போது அச்செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மாதவன், “எனக்கும் இது புதிய செய்தி தான். இதை கேட்கும்போது ஏற்படும் உற்சாகத்தை போல, இது போன்ற ஒரு யுனிவர்ஸில் நானும் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன்.