‘காதல் தி கோர்’ மலையாள படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது: சிறந்த படமாக தேர்வு

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வரும் 13-ம் தேதி வழங்குகிறது. 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதை இயக்குநர் ஜியோ பேபி பெறுகிறார்.

‘காதல் தி கோர்’ மலையாள படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது: சிறந்த படமாக தேர்வு

புதுச்சேரி: மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வரும் 13-ம் தேதி வழங்குகிறது. 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதை இயக்குநர் ஜியோ பேபி பெறுகிறார்.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை , நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்படவிழா 2024 வரும் டிச.13-ம் தேதி தொடங்குகிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாலை நடக்கும் விழாவில் 2023-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை மலையாளத் திரைப்படம் ‘காதல் தி கோர்’ பெறுகிறது. இதன் இயக்குநர் ஜியோ பேபிக்கு விருதை முதல்வர் ரங்கசாமி வழங்குகிறார்.