கொடைக்கானல், ஊட்டிக்கு ‘வயநாடு’ தந்த எச்சரிக்கை? - ஒரு சூழலியல் பார்வை

கேரள மாநிலம் வயநாடு போன்று பெரும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கொடைக்கானல், ஊட்டியில் தொலைநோக்குத் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொடைக்கானல், ஊட்டிக்கு ‘வயநாடு’ தந்த எச்சரிக்கை? - ஒரு சூழலியல் பார்வை

மதுரை: கேரள மாநிலம் வயநாடு போன்று பெரும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கொடைக்கானல், ஊட்டியில் தொலைநோக்குத் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை போன்ற மலை கிராமங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியும், பாறைகள், கற்கள் தாக்கியும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வயநாடு கேரளாவின் முக்கியச் சுற்றுலாத் தலமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா விடுதிகள் மலைச்சரிவுகளில் கட்டப்பட்டிருந்தன. கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் வயநாடு செல்வது உண்டு. வாகனங்கள் சென்று வரு வதற்காக புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.