திருப்பூர் மாநகராட்சி உருவாகி 16 ஆண்டுகளாகியும் குப்பை கொட்ட பாறைக் குழியை தேடும் நிலை!

திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டன் குப்பை சேகரமாகிறது. கடந்த சில நாட்களாக இந்த குப்பை, தற்காலிகமாக திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்திலுள்ள கைவிடப்பட்ட பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி உருவாகி 16 ஆண்டுகளாகியும் குப்பை கொட்ட பாறைக் குழியை தேடும் நிலை!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டன் குப்பை சேகரமாகிறது. கடந்த சில நாட்களாக இந்த குப்பை, தற்காலிகமாக திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்திலுள்ள கைவிடப்பட்ட பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “திருப்பூர் பொங்கு பாளையம், காளம்பாளையம், கூட்டுறவு நகர், ராஜா நகர், பாரதி நகர், காளம்பாளையம், பி.ஆர்.நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக் கப்படுகி றோம். சுமார் 7 ஆயிரம் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.