நரசிங்கம்பட்டி பெருமாள்மலையை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்குமா?
ஏழு வகை பெருங்கற்கால சின்னங்கள் நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தினை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை: ஏழு வகை பெருங்கற்கால சின்னங்கள் நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தினை பல்லுயிரிய மரபு தளமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பல்லுயிரிய மரபு தளங்கள் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகள் தனித்துவமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் சூழலியல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக் குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக் குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை பல்லுயிரிய மரபு தளமாக கடந்த 22.11.2022 அன்று தமிழகத்தின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது தமிழக அரசு.