தேனி மாவட்ட வனச்சாலை, மலை கிராமங்களில் 'ராக்கெட்' பட்டாசு வெடிக்க தடை
தீபாவளிக்கு தேனி மாவட்ட மலைகிராமங்களிலும் வனச்சாலையிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராக்கெட் வெடி வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருசநாடு: தீபாவளிக்கு தேனி மாவட்ட மலைக் கிராமங்களிலும் வனச்சாலையிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராக்கெட் வெடி வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலைகள் சூழ்ந்த மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வருசநாடு, மேகமலை, குமுளி, தேவாரம், போடிமெட்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வனத்துறை சட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வனத்துறையினரின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் இங்கெல்லாம் அதிகம்.