டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

மதுரை அரிட்டாபட்டியில் இன்று வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து 10 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர்.

டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் இன்று வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து 10 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர்.

தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.