ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களின் தாங்குதிறன்: சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் ஆய்வுக்கு அனுமதி  

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பயணிகள், வாகனங்களின் தாங்குதிறன் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களின் தாங்குதிறன்: சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் ஆய்வுக்கு அனுமதி  

சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பயணிகள், வாகனங்களின் தாங்குதிறன் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை விவரம்: கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தும்படி தெரிவித்தது. இதையடுத்து, மார்ச் 27ம் தேதி தலைமைச்செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் முடிவுப்படி, ஐஐடி, ஐஐஎம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.