உதகையில் குடியேறிவிட்ட ‘ஸ்பாட் பில் டக்’ - இனப்பெருக்கத்துக்காக பறவைகள் முற்றுகை

ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்திருப்ப தால், நீலகிரி மாவட்டத்துக்கு அந்நாடுகளின் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அதேபோன்று, வெளிநாட்டு பறவையினங்களும் வலசை வருகின்றன.

உதகையில் குடியேறிவிட்ட ‘ஸ்பாட் பில் டக்’ - இனப்பெருக்கத்துக்காக பறவைகள் முற்றுகை

உதகை: ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்திருப்ப தால், நீலகிரி மாவட்டத்துக்கு அந்நாடுகளின் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அதேபோன்று, வெளிநாட்டு பறவையினங்களும் வலசை வருகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் குளிர் காலத்தில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், இந்தாண்டு பனிப்பொழிவு தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், பறவைகளின் வருகை தற்போதுதான் தொடங்கியுள்ளதால், இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அவ்வாறு வரும் பறவைகள், அதிகளவில் உதகை ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள், தலைகுந்தா பகுதியிலுள்ள காமராஜ் சாகர் அணை ஆகிய பகுதிகளில் காணப்படும். இங்கு கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர், சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடும். தற்போது ஐபிஸ் எனப்படும் அரிவாள் மூக்கன் பறவை அதிகளவு காணப்படுகின்றன.