பாலாறு மீட்புக்கான குரல் - ‘இந்து தமிழ் திசை’ செய்திகளைத் தொகுத்து பேனர்!

பாலாற்றை மீட்டெடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியிக்கத்தினர் வாணியம்பாடி சந்தைமேட்டில் ‘பிளக்ஸ் பேனர்’ வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

பாலாறு மீட்புக்கான குரல் - ‘இந்து தமிழ் திசை’ செய்திகளைத் தொகுத்து பேனர்!

திருப்பத்தூர்: பாலாற்றை மீட்டெடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியிக்கத்தினர் வாணியம்பாடி சந்தைமேட்டில் ‘பிளக்ஸ் பேனர்’ வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வாணியம்பாடி பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாக வாணியம்பாடி சந்தைமேட்டில் உயிரிழந்த மக்களுக்காக ஆங்கிலேயர்கள் வைத்த நினைவு தூணுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 12-ம் தேதி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, நவம்பர் 12-ம் தேதியான இன்று நினைவு தூணுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.