முல்லைப் பெரியாறு மாசடைவதை தடுத்தால் ரூ.2,500 பரிசு: கேரள பஞ்சாயத்தில் அறிவிப்பு

முல்லைப் பெரியாற்றில் குப்பைகளை கொட்டினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறல்களை வீடியோவாக எடுத்து அனுப்புவர்களுக்கு ரூ.2,500 வெகுமதியும் அளிக்கப்படும் என்றும் கேரள மாநிலத்தில் உள்ள வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு மாசடைவதை தடுத்தால் ரூ.2,500 பரிசு: கேரள பஞ்சாயத்தில் அறிவிப்பு

குமுளி: முல்லைப் பெரியாற்றில் குப்பைகளை கொட்டினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறல்களை வீடியோவாக எடுத்து அனுப்புவர்களுக்கு ரூ.2,500 வெகுமதியும் அளிக்கப்படும் என்றும் கேரள மாநிலத்தில் உள்ள வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இதன் மதகுகள் வழியே கேரளப்பகுதிகளுக்கு நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து இடுக்கி அணையை சென்றடைகிறது. நீர் தேக்கத்தின் பின்பகுதியில் இருந்து சுரங்கம் மற்றும் குழாய் மூலம் தமிழகப் பகுதிக்கு பாசனம்மற்றும் குடிநீருக்காக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.