நாகர்கோவில் - வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீயால் மக்கள் அவதி!
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளான இன்று தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்: வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளான இன்று தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகள் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் மலைபோல் கொட்டப்படுகிறது. இங்கு வெயில் நேரம் மற்றும் அதிக காற்றடிக்கும் நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. வலம்புரிவிளை குப்பை கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதாலும், முக்கிய போக்குவரத்து மிக்க இடமாக பீச் ரோடு இருப்பதாலும் தீ விபத்தின்போது புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இந்த மாநகராட்சி குப்பை கிடங்கை குடியிருப்புகள் மற்றும் ஆள் நடமாட்டமில்லாத மாநகரின் பிற பகுதியில் மாற்ற வேண்டும் என 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.