ஆபரேஷன் பேடியா: உ.பி.யில் 7 பேரைக் கொன்ற ஓநாய்களில் ஒன்றைப் பிடித்த வனத்துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றுவிட்டு, 15 பேரை காயப்படுத்திய ஓநாய்களில் ஒன்றை வனத் துறையினர் வியாழக்கிழமை பிடித்துள்ளனர்.

ஆபரேஷன் பேடியா: உ.பி.யில் 7 பேரைக் கொன்ற ஓநாய்களில் ஒன்றைப் பிடித்த வனத்துறை!

பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றுவிட்டு, 15 பேரை காயப்படுத்திய ஓநாய்களில் ஒன்றை வனத் துறையினர் வியாழக்கிழமை பிடித்துள்ளனர்.

மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓய்நாய்களைப் பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற ஒன்றை தொடங்கி இருந்தது. இன்று பிடிபட்ட ஓநாயுடன் வனத்துறையினர் இதுவரை நான்கு ஓநாய்களைப் பிடித்துள்ளனர். இது குறித்து ஆபரேஷன் பேடியாவின் பொறுப்பாளரான பராபங்கி பிராந்திய வனத்துறை அதிகாரி, ஆகாஷ்தீப் பதவான் கூறுகையில், "சிசாய்யா சூடாமணி கிராத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் இன்று காலை ஆண் ஓநாய் ஒன்று பிடிபட்டது. அது முழு வளர்ச்சி அடைந்த ஆண் ஓநாய் ஆகும்" என்று தெரிவித்தார்.