நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம்

சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள், அதன் நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய அழிவுகள் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தரமாக மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம்

திருவனந்தபுரம்: சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள், அதன் நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய அழிவுகள் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தரமாக மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு, அதிலிருந்து உயிர்பிழைத்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் பலர் தங்களின் பழைய வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மேலும், பலர் வசிப்பதற்கு வேறு வீடு, நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலையுடன் உள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மேப்பாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ள புஞ்சிரிமத்தம், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் மறுகுடியமர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், முதல் இரண்டு கிராமத்தின் சில பகுதிகள் எதிர்காலத்தில் மக்கள் வசிக்க தகுதியற்றவைகளாக மாறலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.