விநாயகர் சதுர்த்தி: மதுரையில் தோட்டக் கலைத் துறை சார்பில் 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் விற்பனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் ரசாயனம் கலக்காத சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி: மதுரையில் தோட்டக் கலைத் துறை சார்பில் 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் விற்பனை

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் ரசாயனம் கலக்காத சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தோட்டக் கலைத் துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் சிறிய அளவிலான மண் தொட்டி, மண்புழு உரம், கீரை விதைகள் அடங்கிய தொகுப்புடன் ரூ.125-க்கு இது விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரசாயனம் கலக்காத, சூழக்கு உகந்த விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது.