30 ஆயிரம் மரங்களை நட்ட மூதாட்டி துளசி கவுடா காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா (86) கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னடாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா (86) கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னடாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் அங்கோலாவை அடுத்துள்ள ஹொன்னள்ளியை சேர்ந்தவர் துளசி கவுடா (86). பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர், விவசாய கூலியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாத போதும், சிறுவயது முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமோடு இயங்கினார். கடலோர கர்நாடக மாவட்டங்களில் மண் சரிவை தடுக்க மரம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கர்நாடக அரசு அவரை வனத்துறை தூதராக நியமித்தது.