பெங்களூருவில் டிச. 20-ம் தேதி தமிழ் புத்தக திருவிழா
தமிழ்ப் புத்தகத் திருவிழா தலைவர் வணங்காமுடி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெங்களூரு: தமிழ்ப் புத்தகத் திருவிழா தலைவர் வணங்காமுடி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் இந்த புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடக்கி வைக்கிறார். வரும் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் தினமும் மாலை புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.