தீபாவளி மலர்கள்
சிறுகதைகளின் பொக்கிஷமாக உருவாகியிருக்கிறது இந்த மலர். காஷ்மீரின் இயற்கையை வார்த்தைகளில் வடிக்கும் கட்டுரை, எஸ்.வி.வேணுகோபாலனின் ‘மௌனம் கடத்தல்’, இரா.முருகனின் ‘விரல்’, பா.ராகவனின் ‘மகிழ்ச்சி’ மலருக்குச் சிறப்பு சேர்ப்பவை.
மரபுக்கும் நவீனத்துக்கும் பாலமாக உருவாகியிருக்கிறது மலர். விமூர்த்தானந்தரின் அருள் வாக்கு, சிறுகதைகள், கவிதைகள், பாரம்பரிய நடனக் கலைஞர்கள், அகிலனின் நூற்றாண்டு நினைவுக் கட்டுரை, தமிழ்த் திரையில் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதியின் பேட்டி, பாரம்பரியமான ஆபரணங்களின் பெருமையைப் பேசும் பகுதி, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உரை ஆகியவை மலருக்கு அழகு சேர்க்கின்றன. விகடன் 400 பக்கங்கள்: ரூ.160
கிருஷ்ணனை அட்டைப்பட ஓவியமாகத் தீட்டி, அதற்கான கட்டுரையும் மலரை அலங்கரிக்கிறது. ‘பாரதமே ஒரு மாபெரும் கோயில்’, ‘சங்க காலத்தில் முருக வழிபாடு’, ‘கண்ணனும் கர்ணனும் இருபாரதம்’, ‘மாறுபட்ட மகாபாரதம்’, ‘தெய்வங்களின் திருநடனங்கள்’, ‘அசுரன் மகன் எப்படி பக்தனானான்’ உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளின் ஊர்வலம் மலரை அலங்கரிக்கின்றன. அம்மன் தரிசனம் 342 பக்கங்கள்: ரூ.175