100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்த பாரதியார்!

தமிழில் ‘அறைக்கலன்’ எனும் சொல்லை தான் உருவாக்கியதாக பேட்டி ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லி இருந்தார். அது தமிழ் படைப்பாளிகளுக்கு மத்தியில் பெருத்த விவாதமாகி உள்ளது. இந்த சூழலில் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவரான சுப்ரமணிய பாரதியார் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த சொல் அகராதி (அவர் கைப்பட எழுதியது) உள்ளது. அதை கொஞ்சம் பார்ப்போம்... 

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்த பாரதியார்!

தமிழில் ‘அறைக்கலன்’ எனும் சொல்லை தான் உருவாக்கியதாக பேட்டி ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லி இருந்தார். அது தமிழ் படைப்பாளர்கள், வாசகர்கள் மத்தியில் பெருத்த விவாதமாகி உள்ளது. இந்தச் சூழலில் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவரான சுப்ரமணிய பாரதியார் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த சொல் அகராதி (அவர் கைப்பட எழுதியது) உள்ளது. அதை சற்றே பார்ப்போம்...

கவிதை, கட்டுரை போன்ற படைப்புகளை உருவாக்கியவர் பாரதி. விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளராக இயங்கியவர். தமிழ், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என தாய்மொழி தமிழைப் போற்றுபவர்.