திண்ணை: ஆஸ்திரேலிய விருதுப் பட்டியலில் தமிழர் நாவல்

ஆஸ்திரேலியாவின் உயர்ந்த இலக்கிய விருது ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின்’. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

திண்ணை: ஆஸ்திரேலிய விருதுப் பட்டியலில் தமிழர் நாவல்

ஆஸ்திரேலிய விருதுப் பட்டியலில் தமிழர் நாவல்: ஆஸ்திரேலியாவின் உயர்ந்த இலக்கிய விருது ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின்’. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் இறுதிப் பட்டியலில் ஆறு நாவல்களுடன் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரன் எழுதிய ‘Chai Time at Cinnamon Gardens’ ஆங்கில நாவலும் இடம்பிடித்திருக்கிறது.

சங்கரி சந்திரனின் மூன்றாவது நாவல் இது. சின்னமன் என்கிற இல்லத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்ப வாழ்க்கையின் வழி ஆஸ்திரேலியாவின் நடுநிலைமையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது இந்த நாவல்.