நூல் வெளி: ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடி
வ.வே.சுப்பிரமணியம் ‘தமிழ்ச் சிறுகதையின் மூலவர்’ என்று அறியப்படுகிறார். கம்பராமாயணத்துக்கு வ.வே.சு.ஐயர் செய்த பங்களிப்பு மகத்தானது. கம்பரின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தன் பதிப்பகத்துக்குக் ‘கம்ப நிலையம்’ என்று பெயர் வைத்தார்.
வ.வே.சுப்பிரமணியம் ‘தமிழ்ச் சிறுகதையின் மூலவர்’ என்று அறியப்படுகிறார். கம்பராமாயணத்துக்கு வ.வே.சு.ஐயர் செய்த பங்களிப்பு மகத்தானது. கம்பரின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தன் பதிப்பகத்துக்குக் ‘கம்ப நிலையம்’ என்று பெயர் வைத்தார். கம்பராமாயணத்தைப் பதம் பிரித்துப் பதிப்பிக்க முயன்றார். ‘கம்பராமாயண ரசனை’ என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதினார்.
இக்கட்டுரைகள் அவரது மறைவுக்குப் பிறகு (1940) நூலாக்கப்பட்டுள்ளன. கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இம்மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்துக் கம்பராமாயணத்தை உலகக் காவியங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள நூல்தான் ‘கம்பராமாயணம் - ஓர் ஆய்வு’.