நூல் நயம்: ஆனி ஃபிராங்கும் ஹ்யானாவும்

கரிசனமும் அக்கறையும் இறைந்து கிடக்கும் ஒரு இந்தியக் குடும்பத்துடன் வளரும் அந்த யூதச் சிறுமி பெண்ணாகி, மனைவியாகித் தாயான போதிலும், வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டே உணர்கிறாள்.

நூல் நயம்: ஆனி ஃபிராங்கும் ஹ்யானாவும்

ஹிட்லரின் இனப் படுகொலைகளால் சிதறிப் போகும் ஒரு குடும்பத்தின் தந்தையும் எட்டு வயது மகளும் இந்தியா வந்து சேர்கின்றனர். நாஜிப் படைகளிடம் பிடிபட்ட குடும்பத்தினரின் கதி குறித்தான கேள்வியுடனும் பயத்துடனும் நகர்கிறது காலம். மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போரும் முடிவுக்கு வருகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, சொந்த மண்ணுக்கும் ஹ்யானா என்கிற அந்தப் பெண்ணுக்குமான இடைவெளி கடக்க முடியாததாகி விடுகிறது.

கரிசனமும் அக்கறையும் இறைந்து கிடக்கும் ஒரு இந்தியக் குடும்பத்துடன் வளரும் அந்த யூதச் சிறுமி பெண்ணாகி, மனைவியாகித் தாயான போதிலும், வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டே உணர்கிறாள். ஜீவிதத்துக்கான அர்த்தத்தையும், தொலைந்து அறுந்துபோன வாழ்வின் எச்சத்தையும் கண்டடைவதற்கான சந்தர்ப்பம் மகன் மூலம் அவளுக்கு வாய்க்கப்பெறுகிறது.