விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக கரிசல் இலக்கிய திருவிழா விமரிசையாக தொடக்கம்
கதைக்களனாகவும், அங்கு வாழும் மனிதர்களை கதை மாந்தர்களாகவும் கொண்டு, இந்த மக்களின் வாழ்வியலையும், வலிகளையும், சந்தோஷங் களையும் அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழிநடையில், கடந்த ஒரு நூற்றாண்டாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம்.
விருதுநகர்: மாவட்டத்தில் முதன்முறையாக வும், வெகு விமரிசையாகவும் விருதுநகரில் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2023’ நேற்று தொடங்கியது தெற்கத்திச் சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராம நாதபுரம் போன்ற பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கரிசல் நிலமாக உள்ளது. இதையே கதைக்களனாகவும், அங்கு வாழும் மனிதர்களை கதை மாந்தர்களாகவும் கொண்டு, இந்த மக்களின் வாழ்வியலையும், வலிகளையும், சந்தோஷங் களையும் அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழிநடையில், கடந்த ஒரு நூற்றாண்டாக சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம். கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்கால சந்ததிகளும் அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பில் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2023’ நடத்தப்படுகிறது.
விழாவில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய புத்தக தொகுப்பு அச்சிடப்பட்ட பேனர். இக்கரிசல் இலக்கியத் திருவிழா, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வெகு விமரிசையாக நேற்று காலை தொடங்கியது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்துப் பேசினார். இதில், புக்கர் விருதுக்கான நீளப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளரும், ஜேசிபி இலக்கிய விருதாளருமான பெருமாள் முருகன் தனது சிறப்புரையில் கூறியதாவது: எழுத்தாளர்களுக்கு தமிழ் சமுதாயம் மதிப்பு தருவதில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கி.ராஜநாராயணனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப் பட்டது. இதற்காக, இந்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.