நம் வெளியீடு: சமயச் சான்றோர் வாழ்வின் சாரம்
‘சமயம் வளர்த்த சான்றோர்’ என்ற தலைப்பில் இந்திய சமயச் சான்றோர்கள் 50 பேரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அவர்கள் படைத்த நூல்கள், ஆற்றிய பணிகள் ஆகியவற்றைப் பற்றி கே.சுந்தரராமன் ‘இந்து தமிழ் திசை’யின் ‘காமதேனு’ மின்னிதழில் எழுதிய தொடர் நூலாக வெளியிடப்பட்டுள்ளது
‘சமயம் வளர்த்த சான்றோர்’ என்ற தலைப்பில் இந்திய சமயச் சான்றோர்கள் 50 பேரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அவர்கள் படைத்த நூல்கள், ஆற்றிய பணிகள் ஆகியவற்றைப் பற்றி கே.சுந்தரராமன் ‘இந்து தமிழ் திசை’யின் ‘காமதேனு’ மின்னிதழில் எழுதிய தொடர் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியச் சமய வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்திய ராமானுஜர், ஆதிசங்கரர் உள்ளிட்ட துறவிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்கள், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகிய ஆழ்வார்கள், ராமலிங்க அடிகளார், திருமூலர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார் உள்ளிட்ட தமிழ் மண்ணின் ஆன்மிக முன்னோடிகள், பக்த மீரா, அன்னமய்யா, பக்த ஜெயதேவர், உள்ளிட்ட பக்திமார்க்க முன்னோடிகள், பொதுமக்கள் பலரால் இஷ்ட தெய்வமாக வழிபடப்படும் ராகவேந்திரர், சீரடி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், விவேகானந்தர் உள்ளிட்ட ஞானிகளின் வாழ்க்கையையும் வாக்குகளையும் பின்பற்ற இந்த நூல் உதவும்.