விமர்சனம்: அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது
எழுத்தாளர் அசோகமித்திரனின் 6 சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நிகழ்ச்சி,
எழுத்தாளர் அசோகமித்திரனின் 6 சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை மேடை அரங்கத்தில் செப். 24 அன்று அரங்கேற்றப்பட்டது. ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியிருந்த இந்நிகழ்ச்சியை சென்னை ஆர்ட் தியேட்டர் தயாரித்திருந்தது.
அசோகமித்திரன் எழுதிய ‘புலிக் கலைஞன்’ அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. அந்தக் கதை எவ்வளவு மகத்துவமானது என்பதை கச்சிதமாக உணரும் வகையில் அது மேடையில் நிகழ்த்தப்பட்டது. புலியாட்டக் கலைஞன் காதர் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஆதித்யா, காதரின் கையறு நிலையை சிறப்பாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தார். காதரின் கதையைக் கேட்டு கவலையடையும் சினிமா நிறுவன ஊழியர்களாக சூர்யாவும், விஷ்ணுவும் இந்த அனுபவத்துக்கு மெருகூட்டியிருந்தனர்.