உலகளாவிய ஒடுக்குமுறைகளின் கதை

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘முடிவற்ற கதைகள்’ (Unending Stories)நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் சமீபத்தில் அரங்கேற்றப்பட்டது

உலகளாவிய ஒடுக்குமுறைகளின் கதை

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘முடிவற்ற கதைகள்’ (Unending Stories)நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் சமீபத்தில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தை இணைந்து வழங்கிய மேடை,சென்னை ஆர்ட் தியேட்டர் அமைப்புகள், ப்ரஸன்னா ராமஸ்வாமியுடன் இணைந்து ஒருங்கிணைத்த, 100 மணி நேர நடிப்புப் பயிற்சிப் பட்டறை வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்ட 11 பேர், இந்த நாடகத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமானார்கள்.

முதன்மையாகக் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம் என்றாலும் தன் வழக்கமான பாணியில் பாடல், நடனம், செய்திப் பகிர்வு எனபல்வேறு நிகழ்த்துக் கலை சாத்தியங்களை உள்ளடக்கி உருவாக்கியிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.