மாதொரு பாகனுக்கு கிளம்பிய எதிர்ப்பு: மனம் திறக்கும் பெருமாள் முருகன்
விழாவில் பங்கேற்ற பெருமாள் முருகன் கூறியதாவது: பழமை வாய்ந்த உதகை நகரில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது பெருமைக்குரியது. எனது குடும்பத்தில் யாருக்கும் எழுத, படிக்க தெரியாது.
உதகை: இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் கொண்டாட்டமான உதகை இலக்கிய விழா, இலக்கிய விவாதத்துக்கு அப்பால் நீலகிரி உயிர்க்கோளத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும், பல்வேறு சமூகங்களையும் விளக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 7-வது உதகை இலக்கிய விழா இரு நாட்கள் நடைபெற்றது.
விழா ஒருங்கிணைப்பாளரான ராமன் கூறும்போது, "இந்த ஆண்டு விழாவில் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட போதிலும், கல்வியை ஊக்குவிப்பதிலும், தமிழ்நாட்டின் இலக்கியக் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் இடையறாது அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது" என்றார்.