காவியப் பெண்களின் டின்னர் பார்ட்டி

இந்த நூற்றாண்டின் விசேஷமான பெண்ணியக் கலை வடிவங்களில் ஒன்றாக ‘டின்னர் பார்ட்டி இன்ஸ்டலேஷன்’ முன்னிறுத்தப்படுகிறது

காவியப் பெண்களின் டின்னர் பார்ட்டி

இந்த நூற்றாண்டின் விசேஷமான பெண்ணியக் கலை வடிவங்களில் ஒன்றாக ‘டின்னர் பார்ட்டி இன்ஸ்டலேஷன்’ முன்னிறுத்தப்படுகிறது. அமெரிக்கக் கலைஞரான ஜூடி சிகாகோ உருவாக்கிய படைப்பு இது. முக்கோண வடிவ உணவு மேசை என இதைச் சொல்லலாம். அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளியான சோஜர்னர் ட்ரூத், பைசாண்டைன் அரசி தியடோரா, இங்கிலாந்துக் கவி வர்ஜினியா வுல்ஃப் போன்ற பெண் ஆளுமைகள் 39 பேர் இந்த இரவு மேஜையின் விருந்தினர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். 1974இல் தொடங்கிய இந்தக் கலைவடிவப் பணி 1979இல் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவின் புரூக்ளின் அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.