எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் ‘செங்கோட்டை முழக்கங்கள்’ நூல் வெளியீடு
இந்தியா சுதந்திரம் அடைந்த1947 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலகட்டத்தில் புதுடெல்லி செங்கோட்டையில் நமது பிரதமர்கள் ஆற்றிய சுதந்திரதின உரைகளை எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி நூலாகத் தொகுத்துள்ளார்.
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த1947 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலகட்டத்தில் புதுடெல்லி செங்கோட்டையில் நமது பிரதமர்கள் ஆற்றிய சுதந்திரதின உரைகளை எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி நூலாகத் தொகுத்துள்ளார்.
இதை ‘செங்கோட்டை முழக்கங்கள்' எனும் பெயரில்புத்தகமாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா தி.நகர் தக்கர்பாபா பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. முதல் பிரதியை இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட,‘இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்கக அலுவலர் ஷங்கர் சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார்.