நம் நாட்டில் எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் இல்லை: பெருமாள் முருகன் வேதனை
எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டதன் மூலமாகவே நம் நாட்டில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது என்று, எழுத்தாளர் பெருமாள் முருகன் வேதனை தெரிவித்தார்.
உதகை: எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டதன் மூலமாகவே நம் நாட்டில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது என்று, எழுத்தாளர் பெருமாள் முருகன் வேதனை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 7-வது இலக்கிய விழா நேற்று தொடங்கியது. அங்குள்ள நூலகத்தில் நடந்த விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, நீலகிரி நூலக தலைவர் கீதா சீனிவாசன் வழங்கி கவுரவித்தார்.