பன்மைத்துவத்தின் அடையாளம் இந்தியா: நூல் அறிமுக விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் கருத்து

களம் இலக்கிய அமைப்பு சார்பில் `ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை' எனும் நூல் அறிமுக விழா திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது

பன்மைத்துவத்தின் அடையாளம் இந்தியா: நூல் அறிமுக விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் கருத்து

திருச்சி: களம் இலக்கிய அமைப்பு சார்பில் `ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை' எனும் நூல் அறிமுக விழா திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு, வி.செல்வம் தலைமை வகித்தார். கே.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ரோஜா முத்தையா நூலக இயக்குநர் க.சுந்தர் பாராட்டுரை வழங்கினார்.

நூல் குறித்து கவிஞர் நந்தலாலா பேசியது: எளிய நடையில் அமைந்துள்ள இந்த நூல் நமக்குள் புதிய சிந்தனையை உருவாக்குகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளமான திமில் கொண்ட காளைபோல இந்நூலின் நடை கம்பீரமாக உள்ளது. சங்ககால தமிழர்களின் மூதாதையர்களே சிந்து சமவெளி மக்கள் என்பதை இந்த நூல் பல்வேறு சான்றுகளுடன் கூறுகிறது. இந்த நூலின் மூலம் தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு பண்பாட்டின் அடையாளம் என புரிந்துகொள்ள முடிகிறது என கூறினார்.