நூல் நயம்: தமிழ் நாடகத் தந்தை
தமிழ் நாடக உலகுக்குத் தொண்டாற்றி, தமிழ் நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவருடைய நாடகங்களே அடித்தளம் அமைத்துக்கொடுத்தன.
தமிழ் நாடக உலகுக்குத் தொண்டாற்றி, தமிழ் நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவருடைய நாடகங்களே அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. தமிழ் நாடகத் தந்தை, மறுமலர்ச்சியாளர் என்றெல்லாம் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய நூல் ‘தமிழ் நாடக சாமி’. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ் நாடக வரலாற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு மட்டுமல்லாமல், அவருடைய நாட்டுப்புற நாடகங்கள், நாட்டுப்புற வழக்காறுகள் இடம்பெற்றிருப்பது வாசிக்கச் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. - கார்த்திக்
தமிழ் நாடக சாமி
சு.சண்முகசுந்தரம்
காவ்யா வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு:
044-23726882 / 9840480232